• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாதவனுக்கு சூர்யா அனுப்பிய குறுஞ்செய்தி!

September 16, 2017 தண்டோரா குழு

சூர்யாவின் ‘2D என்டர்டைன்மெண்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’.

செப்டம்பர் 14-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தில் மாதவன் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஒரு குறும்செய்தியையும் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

“என் சகோதரர் மாதவனுக்கு, எனக்கு வார்த்தைகள் போதவில்லை, உங்களுக்கு நன்றி சொல்லி மாளாது. நான் உங்களை ஒரு விஷயத்துக்காக அழைத்தேன், ஆனால் நான் குறிப்பிட வேண்டியதை நீங்கள் முன் கூட்டியே புரிந்து கொண்டு, “கவலையை விடுங்கள்.செய்து முடித்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினீர்கள், உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ப்ரோ. நட்பை மிக அழகாக மாற்றிவிட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க