• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்களின் பிரச்சனைகள் குறித்த படத்தில் நடிக்கும் வரலக்ஷ்மி சரத்குமார்

September 20, 2017 தண்டோரா குழு

இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் பிரியதர்ஷினி. இவர் பெண்களின் தற்போதைய பிரச்சனைகளை கதைக்களமாக கொண்டு ஒரு படத்தினை இயக்கவுள்ளார்.

இப்படம், மிகவும் தனித்தன்மையானது என்றும், ஆக்ஷன், மர்மம், பயணம், திகில் என எல்லாமும் கலந்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷினி கூறும்போது,

வில்லனுடன் கண்ணாம்பூச்சி ஆடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறார். பூனை எலியைத் துரத்தும், ஆனால் எலி தந்திரமாகத் தப்பித்துவிடுவதுடன் பூனையை எப்படி காலி செய்கிறது என்பதான எளிமையான கதை தான். ஆனால் திரைக்கதையில் வித்தியாசம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், ‘முன்னனி ஹீரோ ஒருவரிடம் கதை சொல்லியிருக்கிறோம், அவர் ஓகே சொல்லிவிட்டால், அவர் தான் படத்தின் வில்லன்’ என்றும் அவர் கூறியுள்ளார். அதைபோல், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 30-ம் தேதி விஜயதசமி அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க