• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ‘காதலர் தினம் ‘ பட நடிகை!

July 4, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் காதலர் தினம் என்ற படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் சோனாலி. இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மராத்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் காதலர் தினம், பம்பாய், கண்ணோடு காண்பதெல்லாம் ஆகிய ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது தனக்கு கேன்சர் நோய் தாக்கி இருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி வெளியிட்டிருக்கும் பதிவில்,

தனது உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளை மேற்கொண்டேன். இந்த பரிசோதனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இப்போது இதற்காக நான் நியூயார்க்கில் சிகிச்சை பெற்றுவருகிறேன். எனது நண்பர்களும், உறவினர்களும் எனக்கு பக்கபலமாகவும் , உறுதுணையாகவும் இருக்கின்றனர். இந்த நோயிலிருந்து போராடி விரைவில் குணமடைவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டி வருகின்றனர். சோனாலிக்கு தங்களது ஆறுதலையும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க