• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்த மற்றுமொரு பிரபலம்

August 17, 2017 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’.

பிக்பாஸில் ஆரம்பத்தில் ஓவியா, ஜூலி இருந்த போது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக பார்வையாளர்களை தன் பக்கம் திரும்ப வைத்தது.

இடையில் ஓவியா ஜூலி இருவரும் வெளியேறிய பின், பலரும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதே இல்லை என்று கூறப்டுகிறது. எனவே மீண்டும் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்ட விஜய் டிவி தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் நேற்று நடிகை சுஜாவை புதுவரவாக வீட்டிற்குள் அனுப்பிய பிக்பாஸ் குழு இன்றும் ஓர் புது வரவினை வீட்டிற்குள் அனுப்பியுள்ளது.

ஆம்! ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் தான். எனினும் இவர் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளாரா அல்லது விருந்தாளியாக போயுள்ளாரா என்பது இரவு நிகழ்ச்சியை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க