• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலா – ஜி.வி. – ஜோதிகா கூட்டணியில் உருவாகும் ‘நாச்சியார்’

February 28, 2017 தண்டோரா குழு

இயக்குநர் பாலா – ஜோதிகா கூட்டணியில் உருவாகும் ’நாச்சியார்’ படத்தின் முதல் பார்வை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த நடிகை ஜோதிகா மலையாளப் படத்தின் ரீமேக்கான ‘36 வயதினிலே’ மூலம் வெற்றிகரமாக தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

இதையடுத்து பிரம்மா இயக்கத்தில் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்தார். அப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

அதையடுத்து, இயக்குநர் பாலா, நடிகை ஜோதிகா – ஜி.வி. பிரகாஷ் ஆகியோரை வைத்துப் புதிய படம் இயக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வையை நடிகரும், ஜோதிகாவின் கணவருமான சூர்யா தனது ‘டிவிட்டரில்’ வெளியிட்டுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். அது மட்டுமின்றி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் ஜோதிகாவின் காட்சிகளைப் படமாக்க பாலா திட்டமிட்டுள்ளார். சில நாட்கள் கழித்து படக் குழுவினரோடு ஜி.வி. பிரகாஷ் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க