• Download mobile app
18 May 2026, MondayEdition - 3750
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி2 படத்தில் 5 தவறுகளை சுட்டிக்காட்டிய விக்னேஷ் சிவன்

May 2, 2017 தண்டோரா குழு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த பாகுபலி 2 படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாது திரையுலகினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இந்திய சினிமா வரலாற்றின் வசூல் சாதனைகளை பாகுபலி 2 படம் திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறது.நாளுக்குநாள் இப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

உலகம் முழுவதும் இப்படம் முதல் 4 நாட்களில் எல்லா மொழிகளையும் சேர்த்து ரூ. 600 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் உள்ள 5 மிகப்பெரிய தவறுகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் கண்டுப்பிடித்துள்ளார்.

அவர் சொன்ன தவறுகள் இதோ:

1. இப்படியொரு படத்துக்கு 120 ரூபாயை மட்டும் கட்டணமாக வசூலித்தது தவறு.
2. வெறும் 3 மணிநேரத்தில் இந்த படத்தை முடித்தது தவறு.
3. இப்படியொரு அழுத்தமான படம் எடுத்து மற்ற இயக்குனர்களின் கர்வத்தை குலைத்தது தவறு.
4. இரண்டு பாகங்களோடு இந்த படத்தை முடித்தது மிகப்பெரிய தவறு.
5. இந்திய சினிமா வரலாற்றில் இப்படியொரு வசூல் சாதனையை பெஞ்ச் மார்க்காக வைத்தது அதைவிட தவறு.

மேலும் படிக்க