• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி 3 கதை ரெடியானால் படம் நிச்சயம் எடுப்பேன்– ராஜமெளலி

May 5, 2017 தண்டோரா குழு

பாகுபலி என்ற கதையை வைத்து இரண்டு பாகங்களை இயக்கி ராஜமெளலி இந்திய சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளார். இதுமட்டுமின்றி இந்திய அளவில் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில்,கடந்த 28ம் தேதி வெளியிடப்பட்ட பாகுபலி 2 படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது திரையிலகினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகுபலி 3 வெளிவருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பாகுபலி 2 படத்திற்குக் கிடைத்துள்ள உற்சாக வரவேற்பை தொடர்ந்து, பாகுபலி 3 விரைவில் எடுக்க ஆர்வமாக உள்ளேன் என்று இயக்குனர் ராஜமவுலி கூறியுள்ளார்.

ராஜமெளலி கடந்த 2015ம் ஆண்டே இதுபற்றி டுவிட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்,
அதில்,” பாகுபலி 3 எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனது தந்தை இதற்கான கதையை தயார்செய்துவிட்டால், படம் நிச்சயம் எடுக்கப்படுவது உறுதி”, எனக் கூறியுள்ளார்.

இதனால், பாகுபலி 3 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என, ராஜமவுலி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க