• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் காதர்கான் காலமானார்

January 1, 2019 தண்டோரா குழு

பழம்பெரும் பாலிவுட் நடிகரும் வசனகர்த்தாவுமான காதர்கான் உடல்நலக்குறைவால் காலமானார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் காதர்கான்,81, ஹிந்தி திரையுலகில் காமெடி நடிகர், குணச்சித்தர நடிகர் , வசன கர்த்தா என பன்முக திறமை கொண்டவர். ஆப்கானிஸ்தானில் பிறந்த காதர்கான் 1973 ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா நடித்த தாக் என்ற படத்தை இயக்கினார். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவற்றில் பெரும்பாலான படங்கள் அமிதாப் பச்சன் நடித்தவை.

இந்நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு கனடாவில் தொடர்ந்து 16 வாரங்களுக்கு மேலாக டொரோண்டோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று இரவு, காலமானார்.
அவரது மகன் சர்பரஸ் வெளியிட்ட அறிக்கையில், எனது தந்தை எங்களை விட்டு சென்று விட்டார். கனடா நேரப்படி, டிச.,31 மாலை 6 மணியவில் அவர் காலமானார். அவரது இறுதிச்சடங்கு கனடாவிலேயே நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் இங்கு தான் உள்ளோம். எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையடுத்து, காதர்கான் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க