• Download mobile app
29 Apr 2026, WednesdayEdition - 3731
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான்காவது முறையாக விக்ரம் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

July 13, 2019 தண்டோரா குழு

சாமி 2 படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஜூலை 19-ம் தேதி படம் வெளியாகிறது.

இப்படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். இது அவரது 58-வது படமாகும்..7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தற்போது படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் விக்ரமின் புதிய மன்னர்கள், ஐ, ராவணன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க