• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலுங்குதிரைப்படத்திற்காக விருது பெற்றஇளையராஜா..!

March 2, 2017 tamilsamayam.com

2012-ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா.

ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநில அரசு சிறந்த தெலுங்கு திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ‘நந்தி’ விருதுகள் வழங்குவது வழக்கம்.ஆனால் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால்,கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டிற்கான நந்தி விருதுகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று விடுபட்ட அந்த இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.2012-ஆம் ஆண்டின் சிறந்த தெலுங்கு திரைப்படமாக ராஜ மெளலி இயக்கத்தில் வெளியான “நான் ஈகா” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.இந்த படம் பல்வேறு பிரிவுகளின் கீழ் 6 விருதுகளை பெற்றது.

அதே போல கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான ’ஏதோ வெளிபோயிண்டி மனசு’ திரைப்படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

மேலும் படிக்க