• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துவங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு – இந்தியன் தாத்தா கெட்டப்பில் கலந்து கொண்ட கமல் !

January 18, 2019 தண்டோரா குழு

1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான படம் இந்தியன். இப்படம் மாபெரும் பெற்றி பெற்றது. இப்படத்தில்’உலக நாயகன்’ கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, அண்மையில் பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். 22 வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது லைக்கா நிறுவனம் தயாராகிறது. கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்தன. படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்களையும் ஷங்கர் நேரில் சென்று பார்த்தார். கமல்ஹாசனும் தனது தோற்றத்தை மாற்றுவதற்கான மேக்கப் டெஸ்ட் எடுத்தார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் அவரை வயதான தோற்றத்துக்கு மாற்றி புகைப்படங்கள் எடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு பின் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.

இந்நிலையில், இன்று இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க