• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தரமணி படம் குறித்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

August 16, 2017 தண்டோரா குழு

இயக்குனர் ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தரமணி’.இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையில், மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தரமணி படத்தை நேற்று பார்த்து தயாரிப்பாளர் சதிஷ் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் சதிஷ் குமார் கூறும்போது,

இது போன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான ஆச்சிரியத்தில் உறைந்தே போனேன். ‘தரமணி’ ஒரு துணிச்சலான படம் (Bold film).படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாக கேட்டு பாராட்டினார். படத்தின் வணிக வெற்றியை பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். படத்தின் பெரிய வெற்றியை அவரிடம் கூறியபொழுது கேட்டு மகிழ்ந்தார் எனக் கூறினார்.

மேலும்,’தரமணி’ மூலம் நடிப்பில் காலடி எடுத்துவைத்திருக்கும் எனது நடிப்பையும் எனது கதாபாத்திரத்தையும் பற்றியும் விவரமான பேசி பாராட்டினார். இது போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகள் மேலும் தரமான படங்களை தயாரிக்க எனக்கும் எனது நிறுவனத்துக்கும் பெரும் ஊக்கமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க