• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் உண்மையை கூறினால் நீங்கள் அதிர்ச்சியில் மரணமடைந்து விடுவீர்கள் – ஸ்ரீ ரெட்டி

July 17, 2018 தண்டோரா குழு

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தற்போது அவரது கவனம் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது.இவர் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ்,நடிகரும்,இயக்குனருமான சுந்தர்.சி ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.எனினும் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் ஸ்ரீரெட்டி இதுவரை காவல்துறையினரிடமோ, சம்பந்தப்பட்ட திரைத்துறை அமைப்புகளிடமோ புகார் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி இன்று தனது ஃபேஸ்புக் பதிவில்,

“என்னை ஏமாற்றியவர்கள் பட்டியல் பெரியது என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. என்னுடைய பட்டியல் மிகவும் சிறியது தான். தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகைகள் சிலர் வாயை திறந்து உண்மையை கூறினால், அவர்களை பயன்படுத்தியவர்களின் பட்டியலை கேட்டால், அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அதைபோல் அந்த பதிவில் சில முன்னணி நடிகைளின் பெயரை மறைமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க