• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் படங்களை ‘காப்பி’ என்று கூறியவர்களுக்கு அட்லீ பதிலடி

October 3, 2017 தண்டோரா குழு

இயக்குநர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, ‘ராஜா ராணி’, ‘தெறி’ போன்ற வெற்றி படங்களை அளித்தவர்.இவர் தற்போது விஜய்யின் ‘மெர்சல்’ படத்தினை இயக்கி வருகிறார்.எனினும், இவரது படங்களான ‘ராஜா ராணி’ ‘மௌனராகம்’ படத்தின் காப்பி, என்றும் ‘தெறி’ ‘சத்ரியன்’ படத்தின் காப்பி என்றும் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அட்லீ ஓர் பேட்டியளித்துள்ளார்.அதில் “இசையில் மொத்தமே 7 ஸ்வரங்கள் தான் உள்ளது, அதில் தான் மாற்றி மாற்றி இசையமைக்க முடியும். இன்னும் பல வருடம் கழித்து ஏதாவது ஒரு பாடலை கேட்டால் கூட அதில் ராஜா சார், ரகுமான் சாரின் சாயல் இருக்கும்” என்று கூறினார்.

மேலும்,”காப்பி அடிக்கின்றேன் என்று சொல்வது எளிது, ஆனால், அந்த படத்திற்காக நான் எத்தனை கஷ்டப்படுகின்றேன், ஒரு விஷயத்தை இந்த ட்ரெண்டிற்கு ஏற்றவாறு எப்படி எடுக்கின்றோம் என்பதில் ரிஸ்க் அதிகம். நானும் எல்லோர் போலவும் உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்” என்று பேசியுள்ளார்.

மேலும் படிக்க