• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்!

February 14, 2018 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் தற்போது மாரி2, என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

பவர் பாண்டி படத்தை இயக்கத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்டத்தில் தனுஷும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்க நாகார்ஜுனா, ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக இருவரும் நடிக்க முடியாததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட நடிகர் சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் பெங்களூரு சென்ற தனுஷ் அவரிடம் கதையை கூறி ஒப்புதல் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.சுதீப் இதற்கு முன் ‘நான் ஈ’, ‘புலி’ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க