• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷிற்கு வில்லனாக பிரபல இயக்குனர்

February 6, 2019 தண்டோரா குழு

‘வட சென்னை’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். கலைப்புலி தாணு தயாரித்து வரும் இப்படத்தின் படப்படிப்பு கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது.இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ புத்தகத்தை தழுவிய இந்த கதையில், இடத்தை கையகப்படுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், வில்லனாக ‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’ படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய ‘வட சென்னை’ படத்தில் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க