• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

July 20, 2017 தண்டோரா குழு

தயாரிப்பாளர், இயக்குநர் என கோலிவுட்டில் பிஸியாக இருந்து வரும் நடிகர் தனுஷ் பாலிவுட்டிலும் நடித்து தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கும் “த எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆப் த பகிர்” படத்தில் பேய் விரட்டுபவராக தனுஷ் நடிக்கிறார். அவருடன் பர்காத் அப்தி, அபேல் ஜாஃப்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடைபெற்றது.இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனுஷ் கூறும்போது,

‘பகிரின் பயணம் முடிவடைந்துவிட்டது. உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது. மொத்தப் படக்குழுவுக்கும் என் அன்பும் நன்றியும். உங்களை மிஸ் பண்ணுகிறேன். அடுத்த ஸ்டாப், வீடு’ என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறனின் ’வட சென்னை’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க