• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தந்தையை தொடர்ந்து மகனை இயக்குகிறார் பாலா

October 9, 2017 தண்டோரா குழு

தெலுங்கு சினிமாவில் அண்மையில் வெளியாகி இளைஞர்களின் மனம் கவர்ந்த ஒரு படம் அர்ஜுன் ரெட்டி. இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் ரீமேக்கின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியை தேர்வு செய்யும் வேளையில் படக்குழு இறங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பிரபல இயக்குநர் பாலா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை விக்ரமே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உறுதிபடுத்தியுள்ளார். இப்படத்தை ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

பாலா இயக்குநராக அறிமுகமான ‘சேது’ படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்திருந்தார். விக்ரமின் சினிமா கேரியரில் மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த படம் ‘சேது’ என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரமின் மகனும் பாலா இயக்கத்தில் சினிமாவிற்கு நுழையவிருக்கிறார்.

மேலும் படிக்க