• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிராபிக் ராமசாமியாக நடிக்கும் மாஸ் ஹீரோவின் தந்தை !

July 26, 2017 தண்டோரா குழு

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தை இயக்குனர் விஜய் விக்ரம் இயக்கவுள்ளார். இப்படத்தை க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்வ விஜய் விக்ரம்.இவர் ஏற்கெனவே எஸ்.ஏ.சந்திரசேகரை வைத்து ‘மார்க்’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருக்கிறார்..

இது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறும்போது,

பொதுமக்கள் நலனுக்காக ஆயிரத்துக்கும் அதிகமான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தவர் டிராஃபிக் ராமசாமி.கொலை மிரட்டல் வந்தும்கூட இத்தனை வயது ஆனபோதும் போராடிக்கொண்டிருக்கும் டிராஃபிக் ராமசாமியின் போராட்ட குணம் எனக்குப் பிடிக்கும்.

இவரது பொதுநல வழக்குகளால் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் நிகழ்ந்துள்ளது. யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாமல் இருப்பவர். இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியாகயிருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க