• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு

April 20, 2018 தண்டோரா குழு

நீண்ட இடைவெளிக்குபின் ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மகளிர் மட்டும்,நாச்சியார் என பல்வேறு படங்களில் ஜோதிகாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்ப்பை பெற்ற ‘தும்ஹரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளார்.இப்படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்கவுள்ளார்.இந்நிலையில்,படத்தின் தலைப்புக்காக,படக்குழு,போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. அதாவது படத்தின் தலைப்பு இருவார்த்தைகளில் இருக்கும் என்றும்,ஒருவார்த்தை ராதாமோகன்,ஜோதிகாவுடன் தொடர்புடையது எனவும்,மற்றொரு வார்த்தை எஃப்.எம்.ரேடியோவின் பெயர் என்றும்,க்ளூ கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது.இப்படத்திற்கு காற்றின் மொழி என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க