• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூன் மாதத்திற்கு தள்ளிபோகிறதா ரஜினியின் காலா?

April 16, 2018 தண்டோரா குழு

‘கபாலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில்‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா. இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் நானா படேகருக்கு வில்லன் கதாபாத்திரமாம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ், ஸ்டில்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் காலா படம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம். ஆனால், தற்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் காரணமாக படத்தை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு (2018) ஜூன் மாதம் 14 அல்லது 15-ஆம் தேதியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் படிக்க