• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே நடிகை இவர்தான்!

July 4, 2017 tamilsamayam.com

ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு திரை உலகினர் அனைவரும் அமைதியாக இருந்து வரும் நிலையில் வனமகன் நாயகி சயிஷா மட்டும் எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்.

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு திரை உலகினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று சொல்லும் திரைபிரபலங்கள் கூட ஜிஎஸ்டி பற்றி பேச தயங்குகின்றனர். ரஜினி, கமல், அஜித், விஜய் என யாரும் ஜிஎஸ்டி குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்துள்ள சயிஷா ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சயிஷா. பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி இவர். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சயிஷா கருத்து தெரிவித்துள்ளார். அதில் அதிக வரி வதிப்பு என்பது ஏற்புடையது அல்ல. அது முற்றிலும் நியாயமற்றது. திரையரங்குகள் மூடியிருப்பது வருத்தம் அளிக்கிறது. தயாரிப்பாளர்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க