• Download mobile app
24 Feb 2026, TuesdayEdition - 3667
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்வராகவன் படம் மூலம் என் வாழ்கையில் நிறையமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது

May 3, 2017 தண்டோரா குழு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று பேஸ்புக்கில் ரசிகர்களின் கேள்வி பதில் அளித்துக் கொண்டிருந்தார் நடிகை நந்திதா. அப்போது, செல்வராகவன் படத்தில் நீங்கள் நடித்த கதாபாத்திரம் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதா? என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த அவர், நிச்சயமாக செல்வராகவன் படத்தில் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். இதற்காக நான் சண்டை பயிற்சியையும் கற்றுக்கொண்டேன். இது என் வாழ்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ள இப்படம், வருகிற மே மாதம் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க