• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா 39 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

April 22, 2019 தண்டோரா குழு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடித்துள்ள படம் என்ஜிகே. இப்படம் மே 31-ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 37-வது படமாக உருவான காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி இருந்தார். இப்பத்தில் மோகன்லால், சூர்யா, ஆர்யா, சாயிஷா சைகல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 30-ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல் சூர்யா 38 படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கவுள்ளார். சூரரைப் போற்று என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யா இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது சூர்யா நடிக்கும் 39-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க