• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ” வா மச்சான் வா ”  பாடல்!

February 23, 2018 தண்டோரா குழு

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் தினேஷ். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர். தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர். தினேஷ் தமிழ் திரையுலகில் ஹீரோவாக  அறிமுகாகும் படம் ஒரு குப்பைக் கதை.

தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ளார் பாகன் படத்தை இயக்கிய அஸ்லம். அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.இந்த படத்தைப் பார்த்ததும் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவருடைய ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் படத்தை வெளியிட உள்ளார்.

இப்படத்தில் தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ் நடித்துள்ளார்.சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன் என்ற இரு புதுமுகங்களும் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.யோகி பாபு, ஜார்ஜ் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஆதிரா அம்மாவாக நடித்துள்ளார்.

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் ப்ரேக் அப் பாடல்காதலர் தினத்தன்று உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில், இரண்டாவது பாடலான வா மாச்சான் வா பாடலைநடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க