• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

March 8, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் SK16 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் பாண்டியராஜ் இயக்கவுள்ளார். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் சர்கார், பேட்டா இரு பிரம்மாண்ட படங்களை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க