• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க நிற ஆடையில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

May 20, 2019 தண்டோரா குழு

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு வருடமும் கேன்ஸ் திரைப்பட விழா நடப்பது வழக்கம். அதில் முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுவார்கள். அந்த வகையில் 72-வது கேன்ஸ் 72-வது திரைபட விழா பிரான்ஸ் நாட்டின் ரிவேரியா நகரில் நடைபெற்றது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்விழாவிற்கு வரும் நடிகை ஐஸ்வர்யா ராயின் ஆடைத் தேர்வு எப்போதுமே வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும் என்பதால் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக ரிவேரியா நகருக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் வந்தார். அப்போது அவர் தங்க நிற கவுன் உடுத்தி வந்தார். ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த மெட்டாலிக் கோல்டு கவுன் ரெட் கார்பட் வரவேற்பில் சுற்றியிருந்த கூட்டத்தை அவர் பக்கம் ஈர்த்தது.

மேலும் படிக்க