• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலா படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை !

May 25, 2017 தண்டோரா குழு

சங்கரின்’2.0′ படத்தை அடுத்து ரஜினிபா.ரஞ்சித்துடன் இரண்டாவது முறையாக நடிக்கும் படம் “காலா”.தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ட்ஸ் லுக் போஸ்டரை இன்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்படத்தில்ஹீரோயினாக நடிக்கப்போவதாக ஐஸ்வர்யா முதல் கஜோல் வரை பல்வேறு நடிகைகளின் பெயர் அடிபட்டு வந்தது.ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் தற்போது ஹிந்தி நடிகை ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

தெலுங்கு, கன்னடா, மராத்தி மற்றும் சிங்கள மொழி படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் அஞ்சலி படேல்,29 வயதான இவர் தெலுங்கு படமான படமான “ந பங்காரு தல்லி”படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2013ம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.

இதுவரை பல்வேறு மொழிகளில் 15 படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் முதல் படமான “காலா” அவருக்கு 16வது படம்.இந்தப்படத்தில் நடிப்பது குறித்து அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் , “இந்தாண்டு அடுத்த படம் தி ஒன் அண்ட் ஒண்லி தலைவாவுடன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க