• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் 130 திரையரங்குகளில் வெளியாகிறது ‘காலா’

June 6, 2018 தண்டோரா குழு

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா. இப்படம் நாளை திரைக்கும் வரவுள்ளது.

இப்படத்திற்கு பல இடங்களில் புக்கிங் தொடங்கிவிட்டனர். ஆனால், காவிரி விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் காலா படம் திரையிடப்படும் இடங்களில் பிரச்சனை வர வாய்ப்பு இருப்பதால் கர்நாடகத்தில் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.இதற்கிடையில், கர்நாடகா உயர்நீதிமன்றம் காலா திரைப்படத்தை தடை செய்யக்கூடாது, படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. எனினும் அந்த மாநில முதல்வர் படத்தை வெளியிடாமல் இருப்பதே நல்லது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கா்நாடகாவில் சி நிறுவனம் காலா படத்தை திரையிட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. கன்னட அமைப்பினரின் கடும் எதிர்ப்புகளையும் மீறி கா்நாடகாவில் 130 திரையரங்குகளில் காலா வெளியாகும் என்று சி நிறுவன உரிமையாளா் கனக்புரா ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க