• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகம் முழுவதும் 9000 திரையரங்குகளில் வெளியாகிறது பாகுபலி 2

April 25, 2017 தண்டோரா குழு

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’ படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.இதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார் ராஜமெளலி.மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில் வருகிற வரும் ஏப்ரல் 28ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

‘பாகுபலி 2’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் வெளியாகிறது.அமெரிக்காவில் 1100 திரையரங்குகளிலும், மற்ற நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் வெளியாகவிருக்கிறது.உலகம் முழுவதும் மகத்தான வெளியீடு காரணாமாக ‘பாகுபலி 2’ திரைப்படம் முதல் நாளிலேயே மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் 3வது இந்திய திரைப்படம் ‘பாகுபலி 2’ ஆகும். அமெரிக்காவில் உள்ள 40 ஐமேக்ஸ் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.மேலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் நாளிலேயே எளிதாக ரூ.50 கோடி வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க