• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடி நமீதா?

June 8, 2017 tamilsamayam.com

பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை நமீதா பிரமோத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான “மகேஷிண்ட பிரதிகாரம்” படம், சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் தனது அப்பாவித்தனமான நடிப்பினால், பகத் பாசில் அசத்தியிருப்பார்.

இந்நிலையில் மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் தமிழ் ரீமேக்கை, பிரபல இயக்குநரான பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உதயநிதி ஸ்டாலின் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகி வேடத்திற்கு மலையாள நடிகையான நமீதா பிரமோத் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் ’என் காதல் புதிது’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த நமீதா, மலையாளத்தில் டிராபிக்,விக்ரமாதித்யன்,அமர் அக்பர் அந்தோணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க