• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனராக மாறிய நடிகை அக்ஷயாரோ

May 7, 2018 தண்டோரா குழு

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான கலாபக் காதலன் படத்தில் நடிகை ரேணுகாமேனனின் தங்கையாக நடித்தவர் அக்ஷயாரோ.தற்போது நடிகை அக்ஷயாரோ “யாளி” படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகன் தமன் ஜோடியாக அக்‌ஷயா நடித்துள்ளார்.மேலும் ஊர்வசி,மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பற்றி அக்ஷயாரோ கூறுகையில்,

“தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும்.தற்போது நானும் அந்த வரிசையில் இணைந்துளேன்.மும்பையின் பின்னணியில் நடக்கும் இப்படம் ரொமாண்டிக்,திரில்லர் படமாக இருக்கும்.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா ஜூன் மாதம் நடைபெறவுள்ளது என்றும்,ஜூலை மாதம் திரைக்கு வரும்”. என்று கூறினார்.

மேலும் படிக்க