• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் மிஷ்கினின் புதிய திரைப்படம்!

December 15, 2020 தண்டோரா குழு

தயாரிப்பாளர் T.முருகானந்தம் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது. ‘சைக்கோ’ வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே பலரின் எதிர்பார்ப்பை இப்படம் கூட்டியுள்ளது.
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிகின்றார்.

‘பிசாசு 2’ பட வேலைகள் பூஜையுடன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுகல்லில் இன்று துவங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா இந்த படத்தில் இணைந்துள்ளார். மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM), பிரியா ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.

மேலும் படிக்க