• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இம்சை அரசன் 24ம் புலிகேசியில் வடிவேலுவிற்கு பதில் யோகிபாபுவா?

February 20, 2019 தண்டோரா குழு

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர்ஹிட்டான படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ . இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் சிம்புதேவன் இயக்கினார். வடிவேல் நாயகனான நடிக்கும் இப்படத்தை ஷங்கர் தயாரித்து வந்தார்.

இதனையடுத்து ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஆனால் படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். வடிவேலுவின் இந்த நடவடிக்கையால் படத்தின் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். இதனால், வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறப்பட்டது.எனினும் இதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை.

இந்நிலையில் வடிவேலுவின் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். மேலும் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க