• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படத்தில் நடிக்கும் நடிகை அஞ்சலி

May 21, 2018 தண்டோரா குழு

விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலியின் கைவசம் மம்மூட்டியின் ‘பேரன்பு’, சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’, விஜய் சேதுபதி படம் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அஞ்சலி கமிட்டாகியுள்ளார். லிசா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘PG மீடியா வொர்க்ஸ்’ நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கவுள்ளார்.

திகில் கலந்த த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்த ஹாரர் படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இது இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க