• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியன் 2 படத்தின் செட் அமைக்கும் பணி துவங்கியது

November 12, 2018 தண்டோரா குழு

1996-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, அண்மையில் பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள்.

எனினும் அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகியும் இப்படம் குறித்த எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் கலை பணிகளை டி.முத்துராஜ் கவனிக்கிறார். இவர் முன்னதாக ஷங்கர் இயக்கிய ‘ஐ’, ‘2.0’ படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க