• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.ஜே.பாலாஜியுடன் அரசியலில் களத்தில் இணைந்த பிரியா ஆனந்த்

May 18, 2018 தண்டோரா குழு

ஆர்ஜே-வான பாலாஜி காமெடியனாக படங்களில் நடித்து வருகிறார். பல பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வரும் ஆர்ஜே பாலாஜி,ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் அவர் அரசியலில் களமிறங்குகிறார் என்ற சுவர் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கிடையில், தனது கட்சிக் கொடியின் புகைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி ஃபேஸ்புக், ட்விட்டரில் வெளியிட்டு இன்னும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆர்.ஜே.பாலாஜி உண்மையிலேயே அரசியலில் நுழையவிருக்கிறாரா,அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இதற்கிடையில்,தனது அடுத்த பயணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக `எல்கேஜி’ என்றபடத்தில் நடிக்கிறார்.பிரபு இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உரிமையாளர் டாக்டர்.ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.அரசியலை மையப்படுத்தி காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது.

இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில்,

`நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் வாயிலாக. LKG’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க