• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆகஸ்ட் 10-ல் வெளியாகும் ‘விவேகம்‘

July 17, 2017 tamilsamyam.com

அஜீத் நடித்த ‘விவேகம்’ ஆகஸ்ட் 10ம் தேதி கண்டிப்பாக வெளியாகிறது என படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விவேகம்‘. இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘விவேகம்‘ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை செர்பியாவில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு. இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்றும், ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதனை படக்குழு மறுத்திருக்கிறது.

படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முன்பே தொடங்கிவிட்டதால், திட்டமிட்டப்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. எவ்வித தொய்வுமில்லை. “உறுதியாக ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும். விரைவில் படத்தின் தணிக்கைக்கு அனுப்பவுள்ளோம்“ என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜீத்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் படிக்க