• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆகஸ்ட் மாதம் விஐபி-2 ரிலீஸ்: சௌந்தர்யா ரஜினிகாந்த்!

July 20, 2017 தண்டோரா குழு

தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போனதாக இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் – அமலா பால் ஆகியோரை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இந்தப் படம் 2014ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகை கஜோல், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம், தனுஷின் பிறந்தநாளான 28ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க