• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அவதார் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

September 29, 2020 தண்டோரா குழு

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ல் வெளியான ‘அவதார்’ திரைப்படம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.வசூலிலும் சாதனை படைத்த இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதுகளையும் வென்று குவித்தது.

11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவதார் படத்தின் 2ஆவது, 3ஆவது பாகங்களுக்கான படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்த அவதார் படத்தின் 2ஆவது பாக படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன், முன்னணி நடிகர் அர்னால்டுடன் வீடியோ அழைப்பில் பேசுகையில், 2ஆவது பாக படப்பிடிப்பு 100 சதவீதமும்,3ஆவது பாக படப்பிடிப்பு 95 சதவீதமும் முடிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். 2022ம் ஆண்டு டிசம்பரில் 2ஆவது பாகம் ரிலீஸ் ஆகும் என படத் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவதார் பட ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

மேலும் படிக்க