• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மாவின் கோயிலைத் திறந்த ராகவா லாரன்ஸ்

May 15, 2017 தண்டோரா குழு

நடிகர் லாரன்ஸ் தன் அம்மா கண்மணிக்கு கட்டிய கோயிலை, அன்னையர் தினமான நேற்று திறந்தார்.

தன் அம்மாவின் மிகவும் அன்பு கொண்டவரான நடிகர் லாரன்ஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு, அன்னையர் தினத்தன்று தன் அம்மாவுக்கு கோயில் கட்டப்போவதாக அறிவித்தார்.‘அம்மாவுக்கு கோயிலா?!’ என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதற்கிடையில் அன்னையர் தினமான நேற்று அவர் சொன்னது போலவே அம்மாவின் கோயிலைத் திறந்துவிட்டார்.

அந்தக் கோயிலில், அவருடைய அம்மா கண்மணியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்மா போலவே தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சிலைக்காக, மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டாராம் லாரன்ஸ்.

இது குறித்து லாரன்ஸ் கூறும்போது,

“எல்லோருமே அமைதியையும், கடவுளையும் வெளியில் தேடுகின்றனர். அப்படி தேடித்தேடி கிடைக்காமல், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால், கூடவே இருக்கும் அம்மா என்ற கடவுளைப் பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை. அதை உணர்த்தத்தான் இந்தக் கோயில்” என்கிறார்.

மேலும் படிக்க