• Download mobile app
19 Nov 2025, WednesdayEdition - 3570
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய், விக்ரம், சிம்பு காம்போவில் பொன்னியின் செல்வன் மணிரத்னத்தின் புது அவதாரம் !

November 29, 2018 தண்டோரா குழு

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் செக்கச் சிவந்த வானம். இப்படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்தனர். விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை சிறந்த மல்டி ஸ்டாரர் படமாக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். கடந்த முறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

தற்போது இந்தப் படத்துக்காக நடிகர் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோரை இயக்குநர் மணி ரதனம் அணுகியுள்ளார். மேலும் நடிகர் விஜய்யை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து ஃபோட்டோ ஷூட் செய்துள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விக்ரம் மற்றும் சிம்பு இருவரையும் வைத்து விரைவில் இதே போன்றதொரு போட்டோ ஷூட்டும் விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது.இப்படத்தையும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தன்னுடன் இணைந்து தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் வெற்றி பெறுவாரா?

மேலும் படிக்க