• Download mobile app
08 Apr 2020, WednesdayEdition - 1519
FLASH NEWS
  • தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை! அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
  • ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல்
  • என்.பி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை – ஸ்டாலின்

விஜய்யின் ‘தளபதி 63’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட லேடி சூப்பர் ஸ்டார்!

March 12, 2019 தண்டோரா குழு

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைத்துள்ள படம் தளபதி 63.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. படப்பிடிப்பு தலத்தில் இருக்கும் விஜயின் வீடியோக்களும் வைரல் ஆனது.

இந்நிலையில் படத்தில் நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும், தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க