மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. இப்படம்
மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.
இதற்கிடையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம்சரண். ‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கை ராம்சரண் மற்றும் என்.வி.பிரசாத் இணைந்து தயாரிக்கவுள்ளனர். மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது
இந்நிலையில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், வேலைக்காரன், தனி ஒருவன் படங்களை இயக்கிய ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது சிரஞ்சீவியின் 153 வது படமாகும்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு