• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா – ஜோதிகா !

February 12, 2019 தண்டோரா குழு

கடந்த 2003ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘காக்க காக்க’. தாணு தயாரித்திருந்த அப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் போலீசார் அதிகாரியாக சூர்யாவின் நடிப்பும், ஆசிரியாக ஜோதிகாவின் நடிப்பும் பெரிதும் பேசபட்டது. பின்னர் சூர்யா – ஜோதிகா திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. எனினும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதைபோல் சூர்யா கேவி இயக்கத்தில் ஒருபடமும், செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க 2 படத்தில் சூர்யா, ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கலை புலி தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கெளதம் மேனன் தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் படத்தில் வேளைகளில் பிசியாக உள்ளார். இப்படங்களை தொடர்ந்து அவர் காக்க காக்க 2 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க