• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் இணையும் தனுஷ் -மாரி செல்வராஜ் கூட்டணி !

April 10, 2023 தண்டோரா குழு

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பின்னர் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், மீண்டும் தனுஷை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்தை ஜீ(zee) ஸ்டுடியோஸ் மற்றும் தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

தற்போது இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க