• Download mobile app
19 Apr 2026, SundayEdition - 3721
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனைவி படத்தில் சொந்தக் குரலில் பாடும் சிங்கம் நடிகர்..!

January 30, 2017 tamilsamayam.com

நடிகை ஜோதிகா நடித்து வரும் ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா சொந்த குரலில் பாடல் ஒன்றை பாட இருக்கிறார்.

நடிகர் சூர்யாவுடனான திருமணத்திற்கு பிறகு சினிமா உலகிலிருந்து விலகியிருந்த நடிகை ஜோதிகா,36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.அந்த படம் வெற்றியடைந்ததால்,கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ஜோதிகா நடிக்க ஆயத்தமானார்.அதன்படி தற்போது ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார்.

பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில்,தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.மாயாவி படத்திற்கு பிறகு மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா சொந்தக் குரலில் பேசியுள்ளார்.மேலும் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை நடிகர் சூர்யா பாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.’குற்றம் கடிதல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரம்மா,மகளிர் மட்டும் படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் படிக்க