• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேட்ட படத்தின் சூட்டிங் முடிந்தது டுவிட்டரில் ரஜினி பதிவு !

October 19, 2018 தண்டோரா குழு

காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்றது. இப்படத்தில், ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது. 15 நாட்களுக்கு முன்பே சூட்டிங்கை முடித்தற்காக இயக்குநர் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு நன்றி.அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் என
பதிவிட்டுள்ளார்.

இதற்கு கார்த்திக் சுப்புராஜ் நன்றி தலைவா என் கனவு நிறைவேறியுள்ளது. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை நான் உங்கள் படத்தை இயக்கியுள்ளேன் என்பதை என கூறியுள்ளார்.

மேலும் படிக்க