• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

February 20, 2020 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஆர்யா, கடைசியாக கடந்த ஆண்டு நடிகர் சூர்யாவுடன் ‘காப்பான்’ படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் ‘டெடி’ படத்தில் அடுத்ததாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷாவுடன் இணைந்துள்ளார்.

இதற்கிடையில், முற்றிலும் உடலமைப்பை மாற்றிய ஆர்யா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது பிரபல இயக்குநருடன் அவர் இணையும் படத்திற்கான தன் தோற்றத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என ஆர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

மேலும் படிக்க