இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். இதற்கிடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது. அதன் பின் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியது.
இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘ வணங்கான் ‘ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் . ஆனால் , கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் , இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது . என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா . இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு , ஒரு படப்பிடிப்பின் அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது . எனவே ‘ வணங்கான் ‘ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி , ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம் . அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் , அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது . ‘ நந்தா’வில் நான் பார்த்த சூர்யா , ‘ பிதாமகன் ‘ – இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் . மற்றபடி ‘ வணங்கான் ‘ படப்பணிகள் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்